தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ்
முடிச்சூர் ரோட்டில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூரில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மணிதநேய மக்கள் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா வடக்கு மாவட்ட தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் பாரதிநகர் சந்திப்பில் நடைபெற்றது.
தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மணிதநேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுசெயலாளரும், மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் யாக்கூப் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து வெய்யிலின் தாகம் தீர்க்க நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், ரோஸ்மில்க், பழரசங்கள் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் மாநில, மாவட்ட, பகுதி, வார்டு நிர்வாகிகள் எராளமனோர் கலந்து கொண்டனர்.