ஈரோடு மாநகரம் காவேரி சாலையில் உள்ள ஜன்னத்துல் பிர்தவ்ஸ் கபரஸ்தான் பள்ளிவாசல் இமாம் மீ.அபுல் ஹசன் ஜமாலி அவர்கள் நேற்று (10.05.2026) புனித ஹஜ் பயணம் புறப்பட்டார்.
ஈரோடு ரயில் நிலையத்தில் அவருக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம.முகமது அர்சத்,மு.மெகபூப் உசேன்,பேருந்து நிலையம் அருகில் உள்ள தாருல் சலாம் பள்ளிவாசல் இமாம் ராஜா முஹம்மது தாவூதி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வழியனுப்பி வைத்தனர்.
ஹஜ் கடமை இனிதே நிறைவேறவும், புனித மதீனாவில் உள்ள இஸ்லாத்தின் இறுதி தூதர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ரவ்ளாவில் நம் அனைவர் சார்பாகவும் சலாம் கூறி, துஆ செய்யுமாறு இமாம் அவர்களிடம் வேண்டிக் கொண்டனர்.