நாகப்பட்டினம்,மே.11-
நாகை மாவட்டம் திட்டச்சேரி ப.கொந்தகை பயணிகள் நிழலகத்தில் உடல்நலம் சரியில்லாமல் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். அருகில் இருந்தவர்கள் 108 – ஆம்புலஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் முதியவரை மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் இவர் சுமார் 70 வயசு மதிக்கத்தக்க முதியவர் என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.