திருவாரூரில் உலக பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவில் மூன்று தினங்களாக நடைபெற்ற தெப்பத் திருவிழா நேற்றுடன் நிறைவடைந்தது.

இதில் மார்ச் மாதம் நடைபெற்ற ஆழித்தேர் திருவிழா மற்றும் தற்போது நடைபெற்று முடிந்த தெப்பத்திருவிழாவில் சிறப்பாக நகரை தூய்மையாக வைத்திருக்க பணியாற்றிய 200 க்கும் மேற்பட்ட நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஈர உள்ளம் அமைப்பில் சார்பில் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை தலைமையில் பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அனைவருக்கும் பிரியாணி வழங்கி நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தனியார் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை அணிவித்து அசைவ பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

இதில் திருவாரூர் நகராட்சியில் பணிபுரியும் 200 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர். இதில் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *