குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும்

  • தமிழ்நாடு முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை..

காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைமடை மாவட்டம் திருவாரூர் மாவட்டம் விவசாயத்தை மட்டுமே முற்றிலும் நம்பியுள்ள மாவட்டம் இந்த மாவட்டத்தில் விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த இந்த மாவட்டத்தில் ஆண்டுதோறும் காவிரி டெல்டா மாவட்டத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு புதிய முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள ச. ஜோசப் விஜய் உடனடியாக டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேட்டூர் அணை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி. விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு சில ஆறுகள் வாய்க்கால்கள் தூர்வார பட்டுள்ளது இந்த நிலையில் மூணாறு தலைப்பில் இருந்து பிரியும் கோரையாற்றை நம்பி சுமார் ஒரு லட்ச ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.

தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரையாறு தூர்வாரப்படாததால் ஆறு முழுவதும் , கோரைகள் , நாணல்கள் புதர்கள் மண்டியுள்ளதால் பாசணத்திற்கு தண்ணீர் பெற முடியாத நிலையில் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர்.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் கோரையாற்றை முழுமையாக தூர்வாரி விவசாயிகள் பாசனம் பெற தங்கு தடை இன்றி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் அதைப்போல ஆறுகளின் குறுக்கே சட்ரஸ் மதகுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *