தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரத்தில் பத்தாண்டுகள் போராடியும் கடைவீதியில் உள்ள 34 38 டாஸ்மார்க் கடையை மாற்ற முடியாமல் தாராபுரம் வர்த்தக சங்கத்தின் சார்பாக துணை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

தாராபுரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பூக்கடைக்காரர் பகுதியில் இயங்கி வரும் 34.38 அரசு டாஸ்மார்க் கடை நகர மையப் பகுதியில் உள்ளதால் அப்பகுதியில் சென்று வருவோர் போவோர் முகம் சுளித்து சென்று வருவதாக பலமுறை பல வருடங்களாக அரசு அதிகாரிகளுக்கும் அரசுக்கும் பல நாட்கள் கோரிக்கைகளை வைத்து எந்த பலனும் இல்லாமல் இருக்கிறது புதிய அரசு அமைந்ததால் தாராபுரம் மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று தமிழ்நாடு வர்த்தக அணி துணை தலைவரும் தாராபுரம் வர்த்தக சங்கத் தலைவர் ஞானசேகரன் தலைமையில் பத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு டாஸ்மார்க் கடை செயல்பட்டு வருவதால் பள்ளி கல்லூரி மட்டும் கோயிலுக்கு சென்று வரும் மாணவ மாணவிகள் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறார்கள்

மேலும் அப்பகுதியில் காலை முதலே சரக்கு அடித்து விட்டு குடிமக்கள் ரோட்டில் படுத்து உறங்குவதால் பல பிரச்சனை பொதுமக்கள் வியாபாரிகள் சந்திக்க வேண்டிய உள்ளது மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்த கடையில் மது அருந்திவிட்டு இருவர் தாக்கிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது சிவக்குமாருக்க புதிதாக பொறுப்பு ஏற்று இருந்த முதல்வருக்கும் கடையை அகற்ற கோரி மனு அளித்ததாக தெரிவித்தார் இது குறித்து அவர் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக வர்த்தக சங்கம் மூலம் கடைவீதியில் இருக்கும் டாஸ்மார்க் கடையை அகற்ற பல மனுக்கள் போராட்டங்கள் செய்த எங்களை காவல்துறையினர் கைது செய்தனர்

ஆனால் இன்றுவரை அந்தக் கடையை அகற்ற வில்லை தொடர்ந்து அதே இடத்தில் கடந்த ஆட்சியாளர்கள் நடத்தி வந்தார்கள் தற்பொழுது புதிதாக பொறுப்பு ஏற்று இருக்கும் தமிழக வெற்றிக்கழகம் முதலமைச்சருக்கு அந்த கடையை அகற்ற வேண்டும் என்றும் செய்தியாளரிடம் கோரிக்கையாக வைத்தார்

மனுவைப் பெற்றுக் கொண்ட டிஎஸ்பி விரைவில் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் கடைகளை அகற்ற தமிழக அரசிடம் இருந்து உத்தரவுகள் வரும் பொழுது இந்த கடைகள் மக்களுக்கு வியாபாரிகளுக்கு தொந்தரவாக உள்ளது என்று எங்கள் சார்பில் எடுத்து கூறுவோம் பதில் அளித்தார்

இதைத்தொடர்ந்து மாவட்ட காவல்துறையினர் மற்றும் ஆட்சியாளர்களிடம் மேலும் மனு அளிக்கப்படும் பேப்பர் ரவி பாலாஜி ஹரிஹரன் கதிரவன் தண்டபாணி சிங்காரம் ராஜேந்திரன் மகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *