தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே டவர்லைன் பணிகளுக்கு அளவீடு செய்ய வந்த வடமாநில ஊரியர்களை சுற்றி வளைத்த விவசாயிகள்.

குண்டடம் அருகே, விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களின் வழியாக டவர்லைன் பணிகளுக்கு அளவீடு செய்ய வந்த தனியார் நிறுவன ஊழியர்களை விவசாயிகள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஊத்துக்குளி அருகேயுள்ள காவுத்தாம்பாளையத்திலிருந்து கோவை அருகேயுள்ள இடையர்பாளையம் வரை டவர்லைன் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முயற்சி தேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பகிறது.

கடந்த ஆண்டு இதுதொடர்பாக அளவீடு செய்ய வந்த ஊழியர்களை விவசாயிகள் தடுத்து திருப்பி அனுப்பினர். விவசாய நிலங்கள் வழியாக டவர்லைன் அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் விவசாய நிலங்களின் மதிப்பு கணிசமாக குறைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் கூறி வேறுவழியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று குண்டடம் அடுத்துள்ள கத்தாங்கண்ணி பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் அடையாளம் தெரியாத 4இளைஞர்கள் நடந்து செல்வதைப் பார்த்த நிலத்தின் உரிமையாளர்கள், அவர்களிடம் சென்று கேட்டபோது, இந்தியில் பதிலளித்துள்ளனர். திருடர்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். 100க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அதற்குள் அவர்களை அழைத்து வந்த திருப்பூரைச் சேர்ந்த கார் டிரைவர் அங்கு வந்து விபரத்தை கூறினார்.


அவர்கள் 4பேரும் டவர்லைன் அமைக்கும் பணிக்கு அளவீடு செய்ய வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக 4பேரையும் விவசாயிகள் சுற்றி வளைத்து பிடித்து, குண்டடம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று 4பேரையும் மீட்டு போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகளும் போலீஸ் ஸ்டேசனில் திரண்டனர்.தொடர்ந்து விவசாயிகள் தரப்பில் போலீசில் புகார் ஒன்றைக் கொடுத்தனர்.

அதில் எங்களது விவசாய நிலத்தில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்து அளவீடு பணிகளை செய்த 4பேரிடம் விசாரணை நடத்த வேண்டும். எங்களின் அனுமதியில்லாமல் அளவீட்டு பணிகளை மேற்கொள்ள கூடாது என குறிப்பிட்டிருந்தனர்.

பின்னர் போலீசார் சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் பேசி அனுமதில்லாமல் அளவீடு செய்ய கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் குண்டடம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *