கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்டம் ஈரோடு செல்லும் சாலை வேட்டமங்கலத்தில் அமைந்துள்ள வீராசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் கேம்பிரிட்ஜ் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த டாக்டர்.வி.வேலப்பன் ( USA) அவர்களின் 77வது பிறந்தநாள் விழா மற்றும் படத்திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை வீராசாமி கல்வி அறக்கட்டளையின் மேனேஜிங் டிரஸ்டி M.விஸ்வநாதன் தலைமை ஏற்றி சிறப்புரையாற்றுகையில், அமெரிக்காவில் இருந்தபடியே தான் பிறந்த கிராம மக்களுக்கு ஏழை எளிய மக்களை கல்வி அறிவு மருத்துவம் உள்ளிட்ட. அடிப்படை வசதிகள் தேவை என்பதை உணர்ந்து மறைந்த மருத்துவர் வேலப்பன் துவங்கிய வீராசாமி கல்வி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வாழும் காலம் வரை மேற்கொண்டு வந்தது.

அவர் மறைந்து ஏழு ஆண்டுகள் கடந்த பின்னும் இன்று அவர் பிறந்தநாளில் அனைவரும் ஒன்று கூடி படத்திறப்பு விழாவில் கூடியிருப்பது மறைந்த வேலப்பன் விட்டுச் சென்ற பணியினை தொடர்ந்து வழங்க முடிவு செய்துள்ளோம்.மேலும் நாட்டின் வளர்ச்சிக்காக அரசின் உயர் பதவிகளுக்கு செல்வதற்கு வீராசாமி கல்வி அறக்கட்டளை மூலம் மற்ற தொண்டு நிறுவனங்கள் வழியாக அரசு பொதுத்தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மருத்துவ படிப்புக்கான முழு நேர பயிற்சி மையங்கள் துவங்கிட திட்டமிட்டுள்ளோம் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மறைந்த வேலப்பன் விட்டுச் சென்ற கல்விப் பணியை தொடரும் வகையில் மீண்டும் கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி இயங்கிட முன் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறினார்.


இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெஸ்ட் ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் ரவி மற்றும் அருந்தமிழ் அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பால்ராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு மறைந்த டாக்டர். வி.வேலப்பன் திருவுருவ படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இக்கூட்டத்தில் வீராசாமி கல்வி அறக்கட்டளை அறங்காவலர்கள் செல்வராஜ், வீரமணி, குப்புராஜ், சௌந்தர்யா சண்முகம்,மற்றும் ட்ரெஸ்டியும் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சென்னியப்பன், மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *