தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் 9940337853

கோடைக்காலத்தின் பொது மக்களின் தாகத்தைத் தணிக்க, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்படுகின்றன.

இதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் சண்முக சாலையில் தாம்பரம் மாநகர திமுக கட்சி சார்பில் தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவர் காமராஜ் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர், தாம்பரம் மாநகர செயலாளர் எஸ். ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை ரீப்பன் வெட்டி திறந்து வைத்து பொது மக்கள் இலவச தண்ணீர், இளநீர் ,மோர், தர்பூசணி, ரோஸ் மில்க் குளிர்பானங்கள், ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சி முன்னாதாக மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ்றிஞர் கருணாநிதி அவர்கள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மண்டல குழு தலைவர் இந்திரன், பகுதி செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *