பனைத் தொழிலாளி மணிகண்டனை சுட்ட இசக்கி ராஜாவை கைது செய்து நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் .
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சான்றோர் வழக்கறிஞர் கூட்டமைப்பு நிறுவனர் வழக்கறிஞர் சிலுவை நாடார் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த மாதம் ஏழாம் தேதி மணிகண்டன் என்பவரை பதநீர் இறக்கியவரை இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா முன்னறிவிப்பின்றி சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு அரசு சட்டத்திட்டங்களை முறையாக பயன்படுத்தாமல் நான் ஒரு ஹீரோ என்ற நினைப்பில் முகநூல் போராளி போல சகோதரர் மணிகண்டனை இரண்டு கால்களிலும் நான்கு முறை சுட்டுள்ளார் தென்காசி அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்காததால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு நீதியரசர் புகழேந்தி உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
கடந்த ஒரு வார காலத்துக்கு முன்பு காலில் ஆபரேஷன் செய்யப்பட்டு தற்போது சிறிய அளவில் நடந்து வருகிறார் துப்பாக்கியால் சுட்டதால் காலில் பலத்த காயம் ஏற்பட்டு நீர் வடிந்து வருகிறது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் என்னுடைய வாழ்வாதாரமே சிதைந்து இருக்கும் நீதித்துறை தலையிட்டதால் மணிகண்டனுக்கு இன்று நடக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது
இந்த சம்பவம் நடந்தபோது தமிழகத்தில் முறையான அரசு இல்லாததால் காப் வந்த அரசு இருந்ததால் யாரிடம் முறையிடுவது என்று தெரியாமல் இருந்தது அதனால் நாங்களும் போராட்டம் நடத்த முடியாத சூழ்நிலை இருந்தோம். தற்போது தமிழகத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார் சட்டத்தின்படி உதவி காவல் ஆய்வாளர் இசக்கி ராஜா மீது கடும் நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் தமிழக முதலமைச்சர் விஜய் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே இதனை அறிவிக்க வேண்டும். முதல்வர் விஜய் இதை கவனிக்க தவறினால் பணி விவசாயம் மணிகண்டனுக்கு நீதி கிடைக்காவிட்டாலும் ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வருகிற 26 ஆம் தேதி மணிகண்டன் மனைவி தற்போது மூன்று மாத கால கர்ப்பினியாக உள்ளார்
தன்னுடைய உயிரை கூட பொருட்படுத்தாமல் தனது கணவருக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் வருகிற 26 ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி நாகர்கோவில் ஆகிய மாவட்டத்தில் ஆங்காங்கே உள்ள காமராஜர் சிலை முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் கடையடைப்பு நடத்துவதற்கும் அனுமதி வியாபாரிகளிடம் கேட்டுள்ளோம். தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தற்போது ஒன்பது அமைச்சர்கள் பதவியேற்று உள்ளனர்
தற்போது நாடார்கள் ஏழு பேர் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் கடந்த திமுக ஆட்சியில் மூன்று பேர் நாடார் சமுதாயத்தில் அமைச்சராகவும் ஒருவர் சபாநாயகர் ஆகவும் இருந்தார் தற்போது உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் முதல்வர் விஜய் எந்த ஒரு எண்ணிக்கையும் குறைக்காமல் கடந்த திமுக ஆட்சியில் இருந்தது போல நாடார் சமுதாயத்திற்கு மூன்று அமைச்சர்கள் வழங்க வேண்டும் மேலும் ஒருவரும் முக்கியஅரசு பொறுப்பும் வழங்க வேண்டும் என்று சான்றோர் குல கூட்டமைப்பு நிறுவனர் வக்கீல் சிலுவை நாடார் கூறினார் உடன் மணிகண்டன் மனைவி பொன்மணி. வழக்கறிஞர்கள் நம்பிராஜன். திலக் ஆகியோர் உடன் இருந்தனர்