கோவை புரோசோன் மாலில் மே 17 ந்தேதி The Chikoo எனும் அமைப்பு நடத்தும் ஆதரவற்ற நாய்,பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் நிகழ்வு

பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்தும் நடத்தும் இதில் செல்லப்பிராணிகள் பிரியர்களுக்கென பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஒருங்கிணைப்பு குழுவினர் தகவல் தி.சிக்கூ புராஜக்ட் (The Chikoo Project”) எனும் அமைப்பு சார்பில் கோவை புரோசோன் மாலில் மே 17,அன்று “(Pet Adoption Drive”) எனும் பூனை,நாய் போன்ற செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது..

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..

இதில் ,சிக்கூ புராஜெக்ட் நிறுவனர்ளான அத்வைத் ராவ்,அம்ரிதா ரமேஷ் மற்றும் நினாத், நேஹா ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர் சிக்கூ திட்டம் சார்பாக நடைபெறும் Pet Adoption Drive எனும் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம்,பாதுகாப்பில்லாமல் இருக்கும் தெருநாய்கள் மற்றும் பூனைகளுக்கு பாதுகாப்பான நிரந்தர வீடுகளை கண்டுபிடிப்பதே என தெரிவித்தனர்..

குறிப்பாக செல்லப்பிராணிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக தெருவில் சுற்றி திரியும் ஆதரவில்லாமல் இருக்கும் பிராணிகள் தத்தெடுப்பை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்..

இதில் ஆதரவற்ற செல்லப்பிராணிகளை தத்து கொடுப்பதற்கு முன்பாக முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து தடுப்பூசிகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடை பிடிப்பதாக தெரிவித்தனர்..

,பொதுமக்களுக்கு சமூக பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் விலங்குகள் நலன் குறித்து விழிப்புணர்வை இந்த நிகழ்வின் வாயிலாக ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தனர்..


இதில்,SPCA,Humane Animal Society,Pawsome Peoples Project ஆகியோர் இணைந்து விலங்குகளை பாதுகாக்கவும், அன்பான குடும்பங்களுடன் இணைக்கவும் நடத்தப்படும் இந்த விழாவில், மீட்கப்பட்ட நாய்கள், பூனைகளுடன் மக்கள் சந்திப்பு,சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்,செல்லப்பிராணிகளுடன் ராம்ப் வாக் போன்ற கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற உள்ளதாக அத்வைத் ராவ் தெரிவித்தார்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *