திருவாரூர் செய்தியாளர் V,செந்தில் குமார்

திருவாரூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை பட்டாசு வெடித்துக் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு பிரிவுகளாக உடைந்து ஒரு தரப்பினர் தவெக கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதை தொடர்ந்து ஆதரவு அளித்தவர்களின் அதிமுக கட்சி பதிவிகளை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கி புதிய நிர்வாகிகளை உடனடியாக அறிவித்தார்.


அதன் பேரில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் நன்னிலம் சட்டமன்றத் உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் நீக்கப்பட்டார் இதனையடுத்து திருவாரூர் அதிமுக நகர செயலாளர் ஆர்டி மூர்த்தி என்கிற தெஷ்னாமூர்த்தி புதிய மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனை கொண்டாடும் விதமாக பழைய பேருந்து நிலையத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *