கும்பகோணத்தில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா நாகேஸ்வரன் கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
அபிநயாஸ் கலைக்குழுமத்தின் ஹர்ஷினி,கீர்த்திகா,இலக்கியா,வித்யாஸ்ரீ, மிருதுளா,வைஷ்ணவி, ஷெலஸ் பியோலினா ஆகிய மாணவிகளின் பரதநாட்டியத்தை முன்னிட்டு அவர்களுக்கு முறைப்படி சலங்கை அணிவிக்கப்பட்டது.
விழாவில் விஜயமாலதியின் நட்டு வாங்கம் ,திருகண்ணபுரம் சங்கரின் வாய்ப்பாட்டு, அய்யம்பேட்டை செந்திலின் மிருதங்கம், ரவியின் புல்லாங்குழல் ஆகியவற்றுக்கு பரத நாட்டிய மாணவிகள் புஷ்பாஞ்சலி நடனம்,தேவாரம் நடனம், உள்ளிட்ட நடனங்கள் ஆடினர்.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கார்த்திக் வித்யாலயா பள்ளி குழுமம் நிறுவனர் கார்த்திகேயன், பட்டீஸ்வரம் விவேகானந்தா வித்யாலயா தாளாளர் ராமலிங்கம், தலைமை ஆசிரியர் மீனாட்சி, தலைமை ஆசிரியர் ரோகினி முத்துசாமி,கும்பகோணம்,ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கமிட்டி,செயலாளர்
ருத்ரமணி, திருச்சறை தலைமை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
முன்னதாக ஸ்டார் குரூப்ஸ் மாட்டின் வரவேற்றார். நிறைவில் அபிநயாஸ் அக்கறைக் குழு நிறுவனர் நரேஷ் நன்றி கூறினார்