தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் சட்டமன்ற தொகுகி, குண்டடம் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக அவைந்தலைவர் லிங்கசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
குண்டடம்
திருப்பூர் மாவட்டம் குண்டடம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய அவைத்தலைவர் லிங்கசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில், 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்த, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும், அவரது தலைமையின் மீது முழு நம்பிக்கையுடன் இருந்து, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் அ.தி.மு.க.நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பலர்கலந்து கொண்டனர்.