மே 14, செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர்,



திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் சைவ தளங்களில் முதன்மையானது! நால்வர்களால் போற்றப்பட்ட முதன்மையான திருத்தலம். ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் உள்ள ஊர் திரு ஆரூர் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக கமலாலய திருக்குளம் உள்ளது.

காசிக்கு நிகரான 63 தீர்த்த கட்டங்கள் இந்த திருக்குளத்தில் உள்ளே அமைந்துள்ளது. கோவில் உற்சவத்தின் போது தீர்த்தவாரி விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பல ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து நீராடி புனிதம் அடைந்து வருகின்றனர்.

தற்போது கமலாலய திருக்குளம் தூர்வார வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. குளத்தில் கழிவு நீர் கலக்கப்படுகின்றது. 30 வருடங்களுக்கு மேல் சுத்தம் செய்யாமல் இருக்கின்றது.

ஏனைய ஆட்சிக் காலங்களில் எந்த கட்சியும் திருவாரூர் கமலாலய திருக்குளத்தை சுத்தம் செய்ய முன் வரவில்லை. எனவே ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் ஆளுங்கட்சி உடனடியாக திருவாரூர் கமலாலய திருக்குளத்தை தூர்வார உத்தரவிட வேண்டும்! இந்த திருப்பணியில் அனைத்து கட்சிகளும் இந்து சொந்தங்களும் அமைப்புகளும் சிவன் அடியார் பெருமக்களும் ஒன்று திரண்டு போராடி வெற்றி பெற வேண்டும். முதல் கட்டமாக திருவாரூர் பொதுமக்களிடம் ஒரு லட்சம் கையெழுத்து இயக்கம் தொடங்க உள்ளோம்.அது சமயம் பெரியோர்களும் பக்தர்களும் ஆன்மீக நண்பர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வந்து திருவாரூர் கமலாலய திருக்குளத்தை சீர் செய்ய அன்புடன் அழைக்கின்றேன்!
தியாகேஷன் தொண்டன் தேவ தேவகுமார் திருவாரூர் அவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *