கோவையில் செயல்பட்டு வரும் ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக பல்வேறு சமூக நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன..

இதன் ஒரு பகுதியாக இளைஞர்களின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கோவை பீளமேடு ஹெர்க்லே ஸ்போர்ட்ஸ் சென்டரில், “Launching Sports Carnival” எனும் விளையாட்டு விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகள் உற்சாகமாக துவங்கின.

இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடைபெற்ற போட்டிகளை
ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் மீனா ஜெயக்குமார் தொடங்கி வைத்து பேசினார்..

அப்போது பேசிய அவர், , இன்றைய இளைஞர்கள் விளையாட்டின் மூலம் உடல் நலத்தையும், ஒற்றுமையையும், ஒழுக்கத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். குறிப்பாக கிரிக்கெட் போன்ற அணி சார்ந்த விளையாட்டுகள் தலைமைத்திறன், பொறுப்புணர்வு மற்றும் குழு ஒருங்கிணைப்பை உருவாக்குகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், இளைஞர்களின் நேரத்தை பயனுள்ள செயல்பாடுகளுக்கு திருப்பி சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த விளையாட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் கூறினார்.

விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த இளைஞர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன..

முன்னதாக நடைபெற்ற போட்டிகளுக்கான துவக்க விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஸ்ரீராம் ஜெயகுமார்,ஸ்ரீநாத் ஜெயகுமார்,ஸ்ருதி ஜெயகுமார் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஆக்ருதி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்..

கோவையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழா மூலம் இளைஞர்களிடையே ஒற்றுமை, விளையாட்டு உணர்வு மற்றும் ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *