திருவொற்றியூர். மே.15

திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் ஐடிசி கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.


இவரின் மனைவி சந்திரா. வயது 39 மற்றும் 17 .15 . வயதுள்ள இரண்டு மகன்கள் உடன் வசித்து வருகிறார்.இந்நிலையில் மனைவி கடந்த நான்கு மாதங்களாக மன உளைச்சலுடன் காணப்பட்டதால். மனைவியை ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டுள்ளார்.


பக்கத்து வீட்டில் வசிக்கும் டேவிட் தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாகவும் ஆபாச வார்த்தைகளை கூறி அழைப்பதாகவும் செல்போனில் தொடர்பு கொண்டு துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளார்.


மேலும் தனக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுப்பதும் நீ உன் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு என்னிடம் வந்துவிடு என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து சென்று தொல்லை தருவதாகவும்
ஒரு நாள் இரவு மட்டும் தன்னிடம் இருக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் உன்னையும் உனது கணவரையும் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் என்று கணவரிடம் தெரிவித்தார்.

இதனால் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து செந்தில்குமார் எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன்னுடன் ஐடிசி நிறுவனத்தில் பணிபுரியும் பக்கத்து விட்டு டேவிட் குறித்து புகார் அளித்தார்.


புகாரை விசாரித்த போலீசார் டேவிட்டைகைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் வழக்கை விசாரித்த குற்றவியல் துறை நடுவர் கார்த்திக் டேவிட்டுக்கு பெண்களுக்கு துன்புறுத்தல் செய்த வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனையும் மற்றும் Rs 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனையும். நீட்டிக்கவும் தீர்ப்பை வழங்கினார்.அதன் அடிப்படையில் டேவிட்டை போலீசார் நீதிமன்ற காவலில் வைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *