தாராபுரம்.

சாதனைகளின் தொடர்ச்சியாக, 597/600 மதிப்பெண்கள் பெற்று கே.எஸ். தினேஷ் பாலாஜி மற்றும் எஸ். சஞ்சய் ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். தொடர்ந்து, 596/600 மதிப்பெண்கள் பெற்று பி. தேவமித்திரா பள்ளி அளவில் இரண்டாம் இடத்தையும், 593/600 மதிப்பெண்கள் பெற்று எம். ரேஷ்மா மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

மேலும், இக்கல்வியாண்டிலும் விவேகம் பள்ளி மாணவர்கள் நான்கு பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் ஒரு மாணவனும் மூன்று பாடத்தில்100/100 மதிப்பெண்கள் நான்கு மாணவ – மாணவிகளும் இரண்டு பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் 17 மாணவ – மாணவிகளும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண்கள் 50 மாணவ – மாணவிகளும் பெற்று, மொத்தம் 100 சதங்களோடு100% தேர்ச்சியும் பெற்று சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

இவ்வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் தாளாளர் முனைவர் ஆர். சுப்பிரமணியன் அவர்கள், செயலர் முனைவர் கே. பூபதி அவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளைப் பாராட்டி பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *