மதுரையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடு களை கண்டித்து, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை மாநகர் சார்பில் சிம்மக்கல் பகுதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாணவர் அமைப்பை சேர்ந்த வர்கள், மாவட்ட தலைவர் டீலன் ஜெஸ்டின் தலைமையில் சேதுபதி பள்ளி அருகே திரண்டனர். பின்னர் அவர்கள், நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். இந்தபோராட்டத்தையொட்டி, காவல்துறை சார்பில் தபால் நிலையம் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கிடையே போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தடுப்புவேலிகளை தாண்டி தபால் நிலையத்தை முற்றுகையிட சென்றதால், 5 பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் ஒரு சில மாணவர்கள் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே இலேசான
தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன்பின்னர், அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்து வேனில்அழைத்து சென்றனர்.
பின்னர் அவர்களை மாலையில் விடு வித்தனர். இந்த போராட்டத் தில், மாவட்ட செயலாளர் டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பினர் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், மாவட்டசெயற்குழு உறுப்பினர் கள் மற்றும் மாணவர் சங்க நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.