கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா வியாழன் கிழமை மாலை நடைபெற்றது.

சலங்கை அணிவிலா பூஜையில் மாணவிகள் அகல்யா,ராஜஸ்ரீ ,சஹானா,மகாஸ்ரீ, பவதாராணி, பிரியதர்ஷினி,சர்தர்ஷினி,மற்றும் மாணவர் ஸ்டீபன் புகழ் ஆகியோர் பங்கேற்ற பரதநாட்டியம் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

நடன நிகழ்ச்சிக்கு விஜயமாலதியின் நட்டு வாங்கம் , திருகண்ணபுரம் சங்கரின் வாய்ப்பாட்டு, அய்யம்பேட்டை செந்திலின் மிருதங்கம், ரவியின் புல்லாங்குழல் ,
சரவணன் வயலின் ஆகியோரின் இசையில் நடந்தது.

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சஹஸ்ரா கல்வி நிறுவனங்களின் குழுமம்,தலைவர் புஷ்பா முரளி,கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் , நிர்வாகக்குழு உறுப்பினர் அருள்,தேனாம்படுகை,விவேகானந்தா வித்யாலயா ,தலைமை ஆசிரியர் மீனாட்சி, திருச்சறை தலைமை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி மாணவிகளுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்.முன்னதாக ஸ்டார் குரூப்ஸ் மாட்டின் வரவேற்றார். நிறைவில் அபிநயாஸ் அக்கறைக் குழு நிறுவனர் நரேஷ் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *