செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் விசில் சின்னத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.


வணக்கம் நான் உங்கள் எழில் கேத்தரின் நடத்து முடித்த சட்டமன்ற தேர்தலில் எங்களை நம்பி எனக்கு வாக்களித்த ஒவ்வொரு மனதிற்கும் என் மனமார்த்த
நன்றிகள் உங்கள் ஒரு வாக்கு என்பது சாதாரண வாக்கு அல்ல அது எனது மீது வைத்த
நம்பிக்கை, மேலும் மாற்றத்திற்கான ஆசை நல்ல நாளுக்கான கனவு..
இனி வரும் காலங்களில் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றி,ஒவ்வொரு குடும்பத்தின் குரலாகவும், ஒவ்வொரு இளைஞரின் கனவாகவும்,ஒவ்வொரு பெண்களின் பாதுகாப்பாகவும், ஒவ்வொரு விவசாயின் நம்பிக்கையாகவும் செயல்படுவோம்.
இந்த மகத்தான பொறுப்பை உணர்ந்து, மக்கள் நலனே முதல் குறிக்கோள் என்ற எண்ணத்துடன் உழைப்போம்.


ஒன்றாக இணைந்து புதிய மாற்றத்தையும், வளர்ச்சியையும், மக்கள் மைய அரசியலையும் உருவாக்குவோம் தமிழக வெற்றிக் கழகம் உருவாக்க போகும் அரசியல், சாதி-மத பேதமின்றி மனிதநேயம் மையமாக கொண்ட அரசியலாக இருக்கும். மக்கள் குரலை நேரடியாக கேட்டு செயல்படும் புதிய தலைமுறை அரசியலை உருவாக்குவோம். ஊழல் இல்லாத நிர்வாகம், வெளிப்படையான ஆட்சி, வேகமான வளர்ச்சி, அனைவருக்கும் சம உரிமை இவை எங்கள் உறுதிமொழிகள். குறிப்பாக
மதுராந்தகம் நகரம் மட்டும் அல்ல, கிராமங்களும் முன்னேற வேண்டும்.
உங்கள் அன்பும் ஆதரவும் எங்கள் பயணத்தின் மிகப்பெரிய சக்தி
ஆகவே மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம்
விசில் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு பெருவாரியான வாக்குகள் பெற்று தந்த பொது மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு உங்களுடன் தொடர்ந்து பயணிப்பேன் என எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *