கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மதுபான கடைக்கு பூட்டு போட்ட கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தவாச்சேரியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது இந்நிலையில் கடை அருகே கோவில் உள்ளதால் டாஸ்மார்க் கடைக்கு வந்து செல்லும் மதுபிரியர்கள் அடிக்கடி கோவில் வளாகத்திற்கு உள்ளே சென்று மது அருந்தி வருவதாகவும் கோவிலுக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர் மேலும் சாலையோரம் உள்ள டாஸ்மார்க் கடை என்பதால் அடிக்கடி குடித்துவிட்டு மது பிரியர்கள் சாதி மோதலை ஏற்படுத்துவதோடு விபத்து அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மாவட்ட டாஸ்மார்க் மேலாளர்களுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் கடையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது


இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய் அவர்கள் கோவில் மற்றும் கல்லூரி வளாகங்களுக்கு அருகே உள்ள சுமார் 711 டாஸ்மார்க் கடைகளை அகற்றக்கோரி உத்தரவு பிறப்பித்த நிலையில் குறிஞ்சிப்பாடி கொத்தவாச்சேரி பகுதியில் கோவில் அருகே உள்ள டாஸ்மார்க் கடை அகற்றப்படும் கடைகளின் பட்டியலில் சேர்க்கப்படாமல் உள்ளதால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கடைக்கு பூட்டு போட்டு கடைக்கு முன்னே அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *