மன்னார்குடி., மே.17
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி. தமிழகம் முழுவதும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் , நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் தேர்வில் வினாத்தாள் மோசடியால் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பணிக்காலம் முடிந்த பிறகும் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கிய பொறுப்பு அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் . ஏழை எளிய நடுத்தர மக்களை சீரழிக்கும் வகையில் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.