கோவையில் சிக்கூ அமைப்பு சார்பாக ஆதரவற்ற செல்லப்பிராணிகளை தத்தெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்த இதில் ஆதரவற்ற நாய் பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை பலர் தத்தெடுத்து சென்றனர் கோவையில் ஆதரவற்ற நாய், பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை பாதுகாப்பான குடும்பங்களுடன் இணைக்கும் நோக்கில் “தி சிக்கூ புராஜக்ட்” (The Chikoo Project) அமைப்பு சார்பில் “பெட் அடாப்ஷன் டிரைவ்” (Pet Adoption Drive) நிகழ்ச்சி கோவை புரோசோன் மால் வளாகத்தில் நடைபெற்றது..
பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைத்து நடத்திய இதில்,கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கலந்து கொண்டு பேசினார்..
இந்த நிகழ்வில் SPCA, Humane Animal Society மற்றும் Pawsome Peoples Project உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து செயல்பட்டன. மீட்கப்பட்ட நாய், பூனைகளுடன் பொதுமக்கள் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு, விலங்குகள் நலன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகளுடன் ராம்ப் வாக், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு,பேசுகையில் “இது போன்ற சமூக அக்கறை கொண்ட முயற்சிகள் மிகவும் அவசியமானவை. மனிதர்கள் மட்டுமல்லாமல் அனைத்து உயிரினங்களிடமும் அன்பும் பொறுப்புணர்வும் வளர்க்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகள் சமூகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்கும்,” என்று பாராட்டினார்.
தொடர்ந்து பல்வேறு நிலைகளில் செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிய சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்..
இங்கு தத்தெடுக்கும் செல்லப்பிராணிகளுக்கு வாழ்நாள் இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படும் எனதி சிக்கூ புராஜக்ட் நிறுவனர்களான அத்வைத் ராவ், அம்ரிதா ரமேஷ், நினாத் மற்றும் நேஹா ஆகியோர் தெரிவித்தனர்..
மேலும் இது போன்ற செல்லப்பிராணிகளை தத்தெடுக்க ஆர்வம் உள்ளவர்கள் சிக்கூ அமைப்பின் 87783 96655 என்ற மொபைல் எண்ணிற்கும் அல்லது SPCA : அமைப்பின் 7904042872 இந்த மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்..
பாதுகாப்பின்றி தெருக்களில் சுற்றித் திரியும் நாய், பூனைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பான வீடுகளை உருவாக்கி கொடுக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வு செல்லப்பிராணிகள் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..