தூத்துக்குடி மே 18,
நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சணையை தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று 17.05.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.திருப்பாற்கடல் தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் தீர்மானங்களாக நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொண்டு அனைத்துத் தொகுதிகளிலும் கழகத்தை வலுப்படுத்தி, தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து கழகம் மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து 47 கழக வேட்பாளர்களையும், 6 கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் வெற்றிப் பெற செய்த புரட்சித் தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அவர்களே தொடர்ந்து நீடித்து பணியாற்ற வேண்டும் என இரண்டு தீர்மாணங்களை நிரைவேற்றப்பட்டது.


அதனை தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் நடந்து முடிந்த தேர்தலில் கழகம் வெற்றிப் பெற்றதை தாண்டி பல தொகுதிகளில் வெற்றி வாய்பை நூலிடையில் நலுவவிட்டுள்ளது. என்றார் மாவட்டச் செயலாளர் எஸ் பி சண்முகநாதன்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *