தென்காசி
வர்த்தக சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு எதிரொலியாக சுரண்டை பகுதியில் உணவு பொருட்கள் விலை 30 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான சுரண்டை பகுதியில் தற்போது இஸ்ரேல் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போரின் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

இதனால் வர்த்தக சிலிண்டர் சரிவர சப்ளையாகாத நிலையில் சிலிண்டர் விலை ரூ 1000 வரை உயர்ந்துள்ளது மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.


ஆகவே அதனை பொதுமக்களின் விலைகளும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சுரண்டை பகுதியில் டீ, காபி, இட்லி, தோசை மற்றும் உணவு பொருட்கள் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இன்னும் தட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டு விலை உயர்வு ஏற்படும் நிலையில் இன்னும் விலை உயர வாய்ப்புள்ளது இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படலாம்

V. ராஜகுமார்
தென்காசி மாவட்டம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *