கோவையில் கெயின் ஹோப் அண்ட் லிவ் அகெய்ன் (Gain Hope And Live Again Baba Trust)
சார்பில் 8-ம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது..

செல்வபுரம் பகுதியில் உள்ள வில்வம் மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு சினேகராம் மருத்துவமனை தலைவர் டாக்டர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நெமிலி பாபாஜி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,மனித வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் பிறருக்கு உதவி செய்வதில்தான் இருக்கிறது. சமூகத்தில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும். இளைஞர்கள் மனிதநேயம் மற்றும் சமூகப்பணிகளில் அதிகம் ஈடுபட வேண்டும். ஒருவர் செய்யும் சிறிய உதவியும் மற்றொருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்றார்.

தொடர்ந்து, ஏழை மற்றும் எளிய குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், கல்வி உதவித்தொகைகள் மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில்,அறக்கட்டளை நிர்வாகிகள் நசீர்,அக்பர் பாஷா,சம்சு,அப்பாஸ் உட்பட சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு அறக்கட்டளையின் சேவைகளை பாராட்டினர். மேலும், ஆதரவற்ற மக்களுக்கு தொடர்ந்து உதவி செய்து வரும் அறக்கட்டளையின் பணிகளை பாராட்டி பலர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *