அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கல இசை முழங்க மகா கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம், தன்வந்திரி யாகம்,நவகிரக ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வளம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க வானத்தில் கருடன் வட்டமிட கும்ப கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.பின்னர் தீபாராதனைகள், சிறப்பு அபிஷேகங்கள்,அலங்காரங்கள் நடைபெற்றது.
இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும்,பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அழகாபுரி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.