முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன். காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்.


தமிழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வரை திமுக காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்தவுடன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவளித்து இரண்டு அமைச்சர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவராக இருந்த முரளிதரன் தலைமையில் தூத்துக்குடி மாநகராட்சி காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ். எடின்டா. முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மாநகர நிர்வாகிகள் வட்டார தலைவர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமானகீதா ஜீவன் பேசுகையில் மாவட்டம் மற்றும் மாநகர பொறுப்பில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி நபர்கள் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துள்ளனர்.

நாம் எல்லோரும் இணைந்து பணியாற்றுவோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மோடு இருந்து ஆனாலும் ஒப்புக்கு இருந்து ஒரு தவறான வழியை எடுத்துள்ளனர். மக்களுக்காக பணியாற்றுவோம் நாம் என்றும் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வருகிறோம் என்று மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் கூறினார்.

திமுகவில் இணைந்த முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் முரளிதரன் கூறுகையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இன்று முன்னாள் அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளர் ஆன கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளோம் 54 வார்டு தலைவர்கள் தூத்துக்குடியில் உள்ளார்கள் அதில் 27 வார்டு தலைவர்கள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்

இதற்கு முக்கியமான காரணம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை தடுமாறி சென்று கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சி கொள்கைகளை புறம் தள்ளி விட்டு செயல்பட்டு வருகிறது. 14 ஆண்டுகளாக தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து பயணம் செய்து வந்தது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றி உள்ளோம் தற்போது தவறான முடிவாய் இரண்டு அமைச்சர் பதவிக்காக காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.

குறிப்பாக தேர்தல் காலத்தில் நாங்கள் எல்லோரும் கீதா ஜீவன் வெற்றிக்காக பாடுபட்டோம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகாயராஜ் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரா நியமிக்கப்பட்டுள்ள பெருமாள் சாமி இருவரும் கூட்டணியில் இருந்து கொண்டு தவறான தகவல்களை பரப்பி வந்தனர் தேர்தலின் போது கீதா ஜீவனிடம் ஏராளமான பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி உள்ளனர் ஸ்டெர்லைட் ஆதரவாளர் தான் பெருமாள் சாமி. நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் கூட தமிழக வெற்றி கழகத்திற்கு தான் வாக்களித்தேன் என்று பேட்டி கொடுக்கிறார்

பெருமாள் சாமி. 36 ஆண்டுகாலம் நான் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறேன் ஒன்பது ஆண்டுகால மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து உள்ளேன். இது கொடுத்து தலைமையிடம் பலமுறை கூறினோம் எதையும் கண்டு கொள்ளவில்லை உண்மையான காங்கிரஸ் கட்சியினர் நாங்கள் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளோம் தொண்டர்களின் கருத்துக்களை அறிந்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்கள்

பெரும்பாலான காங்கிரஸ் கட்சியினர் வேறு ஒரு நபரை கூறினார்கள் ஆனால் தலைமை சகாயராஜன் நியமித்துள்ளது கடந்த எட்டு ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் இல்லாமல் ஒதுங்கி இருந்தவர் தான் சகாயராஜ் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து நாங்கள் விலகுவதற்கு காரணம் பெருமாள் சாமியும் சகாயராஜ்ம்தான். காங்கிரஸ் கட்சி தற்போது சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறது. என்று திமுகவில் இணைந்த முன்னாள் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் கூறினார். உடன் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன். மாநகராட்சி மண்டல தலைவர் பாலகுருசாமி. உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *