அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் (சபாநாயகர்) ஜே.சி.டி. பிரபாகரனுக்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஆர்தர் பீட்டர் தலைமை தாங்கினார். தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார் முன்னிலை வகித்தார்.

அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட செயலாளர் தி.ம. கணேசன், மாவட்ட துணைத் தலைவர் அரியலூர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரச்சார செயலாளர் சின்னதுரை, அரியலூர் வட்டார கிளை தலைவர் தங்கராஜ் ஆகியோர், ஜே.சி.டி. பிரபாகரனுக்கு சால்வை அணிவித்து, கங்கைகொண்ட சோழபுரம் ஓவியத்தை நினைவுப் பரிசாக வழங்கி பாராட்டினர்.

மேலும், அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் சபாநாயகரிடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர தமிழக வெற்றி கழக செயலாளர் எம்.எஸ்.கே. கார்த்திக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *