கம்பம், தேனி மாவட்டம்: தேனி மாவட்டம் கம்பம் நகரில் தென்னிந்திய வாணியர் சங்க மகளிர் அணி கூட்டம், தேனி மாவட்ட செயலாளர் எம். கனகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தேனி மாவட்ட வாணியர் சங்கத் தலைவரும், தென்னிந்திய வாணியர் சங்க மாநில துணைத்தலைவருமான ஆர். சுந்தரவடிவேல் அவர்களின் ஆலோசனையின் பேரில், எதிர்வரும் காலங்களில் தேனி மாவட்ட சங்கம் சார்பில் நடைபெறவுள்ள ஐம்பெரும் விழா தொடர்பான முன்னேற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும், நம் சமுதாயத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளின் கல்விச் சிறப்பை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மகளிர் அணியின் மாதாந்திர நிதி நடவடிக்கைகள், உறுப்பினர் சந்தா வசூல் மற்றும் அமைப்பின் வளர்ச்சிக்கான பல்வேறு நிர்வாக அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.