தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மேயா் ஜெகன் பொியசாமி அஞ்சலி செலுத்தினாா்.
தூத்துக்குடி தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் சார்பில் 3வது மைல் புதுக்குடி, அரசு மருத்துவ கல்லூரி மெயின் ரோடு அருகில் தூத்துக்குடியை பாதுகாத்த ஸ்ெடா்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம் நாம் நல்ல காற்றை சுவாசிக்க தம் மூச்சு காற்றை தந்து உயிர் துறந்த தியாகிகளுக்கு 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவர்களது படத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு மலா் அஞ்சலி செலுத்தினார்.
நிகழ்ச்சியில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் மருதப் பெருமாள் செயலாளர் ஜெயராஜ் பொருளாளர் செல்வகுமார் திமுக வட்டச்செயலாளா் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா், மற்றும் மூன்றாவது மைல் பகுதியில் உள்ள வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் மாற்றுத்திறனாளி சங்கத்தின் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் செய்திருந்தது.