திருவாரூர்., மே 24
திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே உலக பிரசித்தி பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு செல்லும் நகரப் பேருந்தில் இன்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பொங்கு சனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்றபோது திருநெய்ப்பேர் கிராமம் அருகே பேருந்து சென்றபோது.
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. பேருந்தில் இருந்த பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு அருகே இருந்த பொதுமக்கள் உடனடியாக பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை பத்திரமாக மீட்டனர்.
இதில் காயமடைந்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரிடம் தொலைபேசி மூலம் அழைத்து விசாரித்தார்.
மேலும் திருவாரூர் மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகனிடம் தொலைபேசி மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூறும்போது …
திருவாரூரில் பேருந்து விபத்து ஏற்பட்ட செய்தியை கேள்விப்பட்டவுடன் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உடனடியாக என்னை அழைத்து சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட பணிகளுக்கு ஆறுதல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.
பேருந்தில் பயணித்த என்பது வயதுக்கு மேற்பட்ட மூதாட்டி ஒருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அவருக்கு உள்நோயாளி பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவரை தவிர மற்ற அனைத்து நோயாளிகளும் அவசர சிகிச்சை பெற்று வீட்டுக்கு திரும்பி விட்டனர் என்றார்.