புவனகிரி மே,24

கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மருதூர் ஊராட்சியில் நடந்து முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களை வாழ்த்தியும் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ராஜ்குமார் அவர்களை வாழ்த்தியும் மருதூர் தமிழக வெற்றி கழகத்தின் கடலூர் மாவட்ட விவசாய அணி தலைவர செயலாளர் விவசாய அணி சார்பாக பார்த்திபன் என்பவர் நேற்று 23/05/2026, காலை 10,00 மணி அளவில் மருதூர் ஊராட்சியில் ஆதிபராசக்தி கோவில் அருகில் வாழ்த்து டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்

இதை இரவோடு இரவாக சமூக விரோதிகள் கிழித்து சாணங்களை முதலமைச்சர் முகத்தில் பூசி கீழே இறைத்து உள்ளார்கள் இது தொடர்பாக மருதூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட விவசாய அணி நிர்வாகி கார்த்தி என்பவர் புகார் அளித்துள்ளார் நடவடிக்கை எடுக்க மறுத்துள்ள மருதூர் காவல் நிலைய ஆய்வாளர் இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *