தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி கடும் சாடல்.!
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள் சாமி செய்தியாளர்களை சந்தித்தார்… அப்போது அவர் கூறுகையில், திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்தது எல்லையற்ற மகழ்ச்சி, காங்கிரஸ் துரோகி, ராகுல் காந்தி துரோகி என்று தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் இல்லை என்றால் 20 வருடம் ஆட்சியில் இருந்து இருக்க முடியாது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2 அமைச்சர் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். காங்கிரஸ் கட்சிக்காரர்களும் மிக மகிழ்ச்சியாக உள்ளார்கள்..
தூத்துக்குடியை சேர்ந்த காங்கிரஸ் கட்சிகாரர்கள் 30 பேர் திமுகவில் சேர்ந்து இருக்கிறார்கள்.. தல திமுக என்றால் அந்த வால் தான் இவர்கள்( திமுகவில் சேர்ந்தவர்கள்) திமுக பக்கம் போயிருக்கிறார்கள்.. இதைத்தான் ராகுல் காந்தி எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். காங்கிரஸ் தூய்மையாக வேண்டும்..
நேற்று இளைஞர் அணி கூட்டத்தில் உதயநிதி, பாஜகவிற்கு காங்கிரஸ் வேலை பார்ப்பதாக கூறியிருக்கின்றார். திமுகவின் மாப்பிள்ளை சார் சபரீசன் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லையா? துர்காவும் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லையா?
இந்தியாவின் முகம் ஸ்டாலின் என்றால் ஏன் கொளத்தூரில் தோற்றுப் போனார். இந்தியாவின் முகம் ராகுல் காந்தி மட்டும் தான் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்.. அனைத்து இடத்திலும் காங்கிரஸ் எழுச்சி பெற்றது போல் தமிழ்நாட்டில் எழுச்சி பெற உள்ளது. திமுக கூட்டணி இல்லாமல் போனால் 12 இலிருந்து 14% ஓட்டு வாங்கினால் பெரிய விஷயம்…
25 கூட்டணி வச்சி வாங்குன திமுக 107 சீட்டு வாங்குன விஜய் பார்த்து எங்களை வச்சு தான் ஆட்சி நடத்துகிறீர்கள் என்று கூறுகிறார்கள்.. திமுக தனித்து நின்று எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் ஆட்சியைப் பிடித்தால் நான் அண்ணா அறிவாலயத்தில் சம்பளமே இல்லாத வாட்ச்மனாக சேர்ந்து கொள்கிறேன்.. காங்கிரஸ் இல்லை என்றால் படு தோல்வி அடைந்து இருக்கும் திமுக.. காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி சேரக்கூடாது என்று பாஜக கொடுத்த அசைன்மென்ட் ,
காங்கிரஸ் இல்லை என்றால் திமுக காலி டப்பா, insta, fb, you tube தான் விஜய் வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.. ஆனால் திமுகவிற்கு அலட்சிய போக்கு, உங்களை பிடிக்க வில்லை ஆகையால்தான் திமுகவை மக்கள் வெறுத்து விட்டார்கள்.. ஆகவே, திமுக எப்படி தோற்றோம் என்று ஆராயாமல் எப்படி வெற்றி பெற்றோம் என்று ஆராய வேண்டும்.. திமுக இல்லாததால் காங்கிரஸ் தனித்துவ கட்சியாக வளரும்.. ஜாதி, பணம் பார்த்து வாக்களிக்கவில்லை.. இதை வைத்து தான் திமுக அரசியல் பேசுகிறார்கள்.. திமுக கொடிய அரக்கன் விடியல் கிடைத்து விட்டது..2 ஜீ வழக்கு இன்னும் நிலுவையால் தான் உள்ளது. அதை வைத்து தான் திமுகவை பாஜக ஆட்டி படைக்கிறது..
இலங்கைத் தமிழர்கள் லட்சக்கணக்கானோர் இறந்ததாக கூறுகிறார்கள்.. ஆனால் இறந்தது 70 ஆயிரம் பேர் தான் இறந்தார்கள். இருந்தும் காங்கிரஸ் அங்கு மக்களுக்கு மறு வாழ்வு கொடுத்து சாதனை செய்து உள்ளது. அதனை வெளியில் சொல்லாதது தான் காங்கிரஸ்.. வீடு வசதி என்றும் பாத்துகாத்து தான் உள்ளது. திமுக கடும் எச்சரிக்கை விடுக்கின்றேன்.. கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். காங்கிரஸ் பற்றி இனி திமுக பேச கூடாது..
மின் தடை, குடிநீர் பிரச்சனையை வைத்து சில அதிகாரிகளை வைத்து திமுக தற்போது வரை அரசியல் செய்து வருகிறது.. பாஜகவின், கள்ள குழந்தை திமுக, செல்ல பிள்ளை அதிமுக என்றார்..
பேட்டி: பெருமாள் சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்