எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக இளைஞரணி கூட்ட நகல் எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த திமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காங்கிரஸ் கட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான
இதனை அடுத்து சீர்காழி போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் இதன் எதிரொலியாக மாலை சீர்காழி புதிய பஸ் நிலையம் அருகில் திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் மருது தலைமையிலும், சீர்காழி நகர திமுக செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், மாநில இளைஞரணி மாநாட்டு நகலை தீயிட்டு எரித்த நிர்வாகிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன
பின்னர் திடீரென ராகுல் காந்தியின் உருவ பொம்மையை தீயிட்டு பிரதான சாலையில் போட்டு எரித்து காங்கிரஸ் கட்சியை கண்டித்து கோஷம் எழுப்பினர் இந்த நிகழ்ச்சியில் நகர இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் கலைவாணன், உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிரதான சாலை நடுவே எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை அகற்ற முற்பட்டனர்.
அப்பொழுது சீர்காழி காவல் ஆய்வாளர் கமல் ராஜ்க்கும் திமுக கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தால் மயிலாடுதுறை – சிதம்பரம் பிரதான சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சீர்காழியில் காவல்துறையினரும் திமுகாவினருக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளு வாக்குவாதத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.