மன்னார்குடி., மே 24

வர்த்தக சங்கம் சார்பில் ஆண்டு தோறும் பொதுமருத்துவம் , மனநல சிறப்பு மருத்துவ முகாம் இரத்ததானம் முகாம் உள்ளிட்ட மருத்துதவ முகாம்களை சேவை மனப்பான்மையுடன் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வர்த்தக சங்கம் சார்பில் இந்தாண்டுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது முகாமை வர்த்தக சங்கத்தினர் தொடங்கி வைத்தனர் .

இம்முகாமில் மருத்துவ குழுவினர், கண்ணில் புரை உண்டாகுதலை கண்டறிதல், நீர் அழுத்தம், துாரப்பார்வை மற்றும் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இம்முகாமில் 150 க்கும் மேற்பட்டாருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 25 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *