காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த புதுநல்லூரில், விஜயன் – பரிமளா தம்பதியினர் வீட்டில் விறகு அடுப்பில் ஏற்பட்ட தீயினால், அருகிலிருந்த மற்றொரு குடிசை வீடு மற்றும் குடோனுக்கும் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள், முக்கிய சான்றிதழ்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகின.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட இரு குடும்பங்களையும் நேரில் சந்தித்த சோமங்கலம் காவல் ஆய்வாளர் நடராஜ் தலைமையிலான காவல்துறையினர், அரிசி, மளிகைப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுடன் நிதி உதவியும் வழங்கினர்.