கூடலூர் நகராட்சியில் பட்டாசு வெடிக்க தடை விதித்த நகராட்சி நகர் மன்ற தீர்மானத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்


கூடலூர் நகராட்சி எல்லைக்குள் பட்டாசு வெடிக்க கூடாது என்று தடை விதித்து நகராட்சி நடுமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த தீர்மானம் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் கைவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது நாளுக்கு நாள் பட்டாசு வெடிச்சத்தம் கூடலூர் நகராட்சி பகுதிகளில் பகிரங்கமாக சத்தமாக கேட்கிறது வீதி எங்கும் பட்டாசு குப்பைகளை குவித்து விட்டு சென்று விடுகிறார்கள் பொதுமக்களும் சிரமப்படுகிறார்கள் இது குறித்து ஆலோசனைக் கூட்டம் கூடலூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது

அந்தக் கூட்டத்தில் மக்கள் நலன் கருதி கூடலூர் மக்கள் மன்றம் சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறுகருத்துக்களை பதிவு செய்தேன் நகராட்சியில் சாக்கடை கட்டுவதற்கான தீர்மானம் பாலங்கள் கட்டுவதற்கான தீர்மானங்கள் கட்டடம் கட்டுவதற்கான தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது நடைமுறைப்படுத்தப்படுகிறது

பட்டாசுக்காக இயற்றப்பட்ட தீர்மானம் மட்டும் ஏன் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை அப்படி நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் கடந்த ஆண்டுகளில் பட்டாசு வெடித்தவர்கள் மீது 100 ரூபாயாவது அபராதம் விதித்ததுண்டா? இப்படி எதுவுமே செய்யப்படவில்லை பட்டாசு வெடிப்பது அதிகப்படியான பட்டாசுகள் வெடிப்பது பெரும்பாலும் நகராட்சி நகர் மன்ற கவுன்சிலர்களின் உறவினர்கள் தான் அதுமட்டுமில்லாமல் இந்த நகராட்சியில் நகர்மன்ற உறுப்பினராக உள்ள மகன் இந்த கூடலூர் நகராட்சியில் பணி செய்யும் ஊழியராக இருந்து கொண்டு ஊர் முழுக்க பட்டாசு வெடித்தது தான் இதில் மிகவும் வெட்கப்பட வேண்டிய விஷயம்


ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு அதை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சொன்னால் மீண்டும் நகராட்சி கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி அதை வாபஸ் பெற்று விடலாமே
கூடலூரில் உள்ள திருமண மண்டபங்கள் அங்கு சேகரமாகின்ற மக்கும் குப்பைகளை ஒன்று சேர்ந்து அதற்கான இயந்திரங்களை நிறுவி அதை குப்பையாக மாற்றி விற்பனை செய்துவிடலாம்
வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை எப்படி பிரித்து நகராட்சிக்கு கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வரும் நகராட்சியின் தற்காலிக பணியாளர்களுக்கு போகும் போதுஏற்படும் சிரமங்களை போக்க அவர்களுடன் ஒரு ஆண் பணியாளர் செல்லவேண்டும்

வீதிகளில் பட்டாசு வெடித்தும் கலர் காகிதங்களை தூவி விட்டும் குப்பை காடாக்கும் அன்றைய தேதியை விசேஷ வீட்டுக்காரர் அவர் ஊர்வலம் சென்ற வீதிகள் உள்ள மொத்த வீடுகளை கணக்கிட்டு வீடுகளுக்கு விதிக்கப்படும் குப்பை வரியை அவர் மீது விதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது இந்த கூட்டத்தில் கூடலூர் மக்கள் மன்றத்தின் மூத்த செயற்குழு உறுப்பினர் முன்னாள் ராணுவ வீரர் கே கொடிஅரசன் மற்றும் நண்பன் ஸ்டுடியோ சிலம்பரசன் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *