கோவை தி ரெசிடென்சி டவர்ஸ் வளாகத்தில் உள்ள சின் சின் ரெஸ்டாரெண்டில் மலேசியன் உணவு திருவிழா தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இந்த உணவு திருவிழா மே 26 முதல் ஜூன் 7 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மலேசிய பாரம்பரிய உணவுகள், நியோன்யா வகைகள், பிரபல ஸ்ட்ரீட் ஃபுட் உணவுகள் உள்ளிட்ட பல்வேறு அசைவ மற்றும் சைவ உணவுகள் இடம்பெறுகின்றன.நிகழ்ச்சியில் தி ரெசிடென்சி டவர்ஸ் பொது மேலாளர் அமர்நாத், சோல் ஆன் எ பிளேட் நிறுவனர் யோகிதா, மலேசிய செஃப் ஃபிட்ரி மற்றும் தலைமை செஃப் சஞ்சய் உடனிருந்தனர்.

கோவை மக்களுக்கு மலேசிய உணவின் உண்மையான சுவையையும் கலாச்சார அனுபவத்தையும் வழங்கும் வகையில் இந்த திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *