திருவாரூர்., மே 31.

திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக மாற்றும் முயற்சியை முன்னெடுக்கும் கர்நாடக அரசுக்கு கட்டணம் தெரிவித்து அதற்கு துணை போகும் மத்திய அரசே கண்டித்து திருவாரூரில் திராவிடர் கழகம் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிட கழக திருவாரூர் மாவட்ட தலைவர் அருண் காந்தி தலைமையில் திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமான கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேகதாது அணை கட்டி தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் கர்நாடகா அரசை கண்டித்தும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சனையை கண்டும் காணாமல் இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கர்நாடகா அரசின் பிடிவாத போக்கை கண்டித்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்சனை என்றால் கண்டும் காணாமல் இருக்கும் ஒன்றை அரசை கண்டித்தும் உச்ச நீதிமன்றத்தின் மெத்தன போக்கை கண்டித்தும் கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம் திராவிட முன்னேற்ற கழகம் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேமுதிக எஸ்டிபிஐ மதிமுக மக்கள் நீதி மையம் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *