புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் சிலப்பதிகார விழா புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்ச்சங்கச் செயலர் பாவலர் சீனு.மோகன் தாசு வரவேற்றார்.தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர்கள் தமிழ்மாமணி ந.ஆதிகேசவன், பாவலர் ப.திருநாவுக்கரசு, பொருளர் மு.அருள்செல்வம், துணைச் செயலர் தெ.தினகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில்மயூரி சித்திர நாட்டியாலயாவின் கலைமாமணி கா.முருகன் குழுவினரின் “சிலப்பதிகார நாட்டிய நாடகம்” நடைபெற்றது. இவ்விழாவில் ந.மு.தமிழ்மணி எழுதிய “வாரணம் ஆயிரம்” எனும் நூலினை புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து வெளியிட கலைமாமணி கா.முருகன் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் உலகத் தமிழர் பேரமைப்பின் பொதுச் செயலாளர் ஆய்வறிஞர் ந.மு.தமிழ்மணி “சீரார் சிலம்பு” என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
இவ்விழாவில் கலைமாமணி ஆறு செல்வன் தலைமையில் “சிலம்பில் பரல்கள்” என்னும் தலைப்பில் கவிஞர்கள் கவிதை வாசித்தனர் .கவிதை வாசித்த அனைத்து கவிஞர்களுக்கும் புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
விழாவில் பேராசிரியர் ஆனந்த வடிவேலு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலைமாமணி எம்.எஸ்.இராஜா, பொறிஞர் மு.சுரேஷ்குமார், அ.சிவேந்திரன், இர.ஆனந்தராசன்,பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன், முனைவர் கோ.பாரதி, முனைவர் சிவ.இளங்கோ கலாம் விதைகள் இயக்கம் இராஜா, முனைவர் ரேகா, முனைவர் மு.இளங்கோவன், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்மாமணி முனைவர் அ.உசேன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன் வந்தவாசி.