தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி பிறந்தநாள் விழா,புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி, கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள மேரி கட்டிட வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் ந. ரங்கசாமி, தற்காலிக சட்டப்பேரவைத் தலைவர் . அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிவகொழுந்து, ராஜவேலு, ஆறுமுகம் (எ) A.K.D. வையாபுரி மணிகண்டன். நாராயணசாமி (எ) நித்தியானந்தம்,அழகு (எ) அழகானந்தம், ரவிக்குமார் செந்தில்குமார், செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ்கண்ணன், கார்த்திகேயன், மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் சுரேஷ் ராஜ், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குனர் முனைவர் குலசேகரன், முக்கிய பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை செய்து இருந்தது.