அண்மையில் வெளியான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளில் ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்கள் மீண்டும் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளன.
ஜூன் 1-ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகளில், பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் அகில இந்திய அளவில் முன்னணி தரவரிசைகளை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
அகில இந்திய அளவிலான தரவரிசையில் நான்காம் இடத்தை மாஸ்டர் மோஹித் சேகர் சுக்லா, 9 வது இடத்தை மெடிசெட்டி நாகா சஹர்ஷா மற்றும் 10 ஆம் இடத்தில் தர்ஷ் சிக்கா ஆகியோர் இடம் பிடித்து கவனம் ஈர்த்துள்ளனர் மேலும் 25 மாணவர்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களில் வத்சன் 91 வது இடத்திலும், சாத்விக் விஷ்ணுசந்தர் 231, ரிஷ்வந்த் 311, ஜோஹித் ஜோபி 650 மற்றும் சஞ்சய் 849-வது இடம் பிடித்து பெற்று சாதனை படைத்துள்ளனர் தொடர்ந்து 20 மாணவர்கள் அகில இந்திய அளவில் முதல் 1000 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஜே.இ.இ.அட்வான்ஸ்டு தேர்வில் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஸ்ரீ சைதன்யா மாணவர்கள் பலர் தேர்வாகிய நிலையில் அவர்களுக்கான பாராட்டு விழா நீலம்பூர் சைதன்யா டெக்னோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் சுஷ்மா போபண்ணா, நாகேந்திரா மற்றும் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்புத் தலைவர் ஹரிபாபு ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற விழாவில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்..
இந்த ஆண்டில் மட்டும் சுமார் ஸ்ரீ சைதன்யா பள்ளியில் பயின்ற 150 மாணவர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது..