தென்பட்டினம் கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிசேக விழா


கல்பாக்கம் ஜுன் 7
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் தென்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று 7 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் 4 ஆம் தேதி மாலை 6 மணியளவில் விநாயகர் பூஜை வாஸ்து சாந்தி பிரவேச பலி கோ பூஜையுடன் தொடங்கிய இந்த விழா மறுநாள் 23 ஆம் தேதி இரண்டாம் கால யாக பூஜை உட்பட நிகழ்ச்சிகள் நடைபெற்றது

இன்று 7 ஆம் தேதி காலை 7:30 மணிக்கு ஸ்ரீ சுந்தர விநாயகர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் ஆகியோருக்கு தீபாராதனைகளுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

இந்த விழாவில் தென்பட்டினம் மற்றும் சுற்றுப் புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பஜனை நிகழ்ச்சி வானவேடிக்கைகளுடன் மேளதாளங்கள இசைக்க அனைத்து உற்சவ திருமேனிகளும் திருவீதியுலா வந்தனர் விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *