வழக்கம்போல் குடிநீர் வினியோகம் நேரில் ஆய்வு செய்த பின்பு மேயர் ஜெகன் பொியசாமி தகவல்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் 3ம் ைமல் பகுதியில் இருந்து திரேஸ்புரம் கடற்கரை பகுதி வரை விரிவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகிறது. ஆண்டாள் தெரு முதல் குருஸ்புரம் வரை பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
இந்நிலையில் வட பத்திரகாளி அம்மன் கோவில் கீழ்புறம் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பக்கிள் ஓடை விரிவாக்கத்திற்கு செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி அளவில் தோண்டும் போது பைப் லைன் எதிா்பாரத வகையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து புதன் காலை உடனடியாக மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி அலுவலா்களுடன் சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது உடனடியாக ஒப்பந்தக்காரர் வரவழைக்கப்பட்டார்.
அதன் பிறகு மேயர் ஜெகன் பொியசாமி கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது
அதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு விரிவாக்கத்திற்கு தோண்டும் போது மெயின் குடிநீர் பைப் லைன் எதிா்பாராத வகையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது மொத்த மாநகராட்சி பகுதியில் 36 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் உள்ளது இதில் வடபகுதிக்கு மட்டும் ஒன்பது குடிநீர் தொட்டிகள் உள்ளது. கலைஞர் டேங்க். எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு குடிநீர் மேல்நிலைத் தொட்டி. பூபால் ராயர்புரம் மேல்நிலை குடிநீர் தொட்டி. ஆதிபராசக்தி நகர் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளிட்ட 9 குடிநீர் மேல்நிலை டேங்கில் இருந்து விநியோகம் செய்யப்படும் குடிநீர் சப்ளை புதன் ஒரு நாள் நிறுத்தப்படுகிறது போர்க்கால அடிப்படையில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இரவுக்குள் உடைப்பு ஏற்பட்டுள்ள குடிநீர் பைப் லைன் சரி செய்யப்பட்டு வியாழன் முதல் வழக்கம் போல் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் பாதிப்பு இல்லாமல் வழங்கப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் ெபாியசாமி தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது குழாய் ஆய்வாளா் குமாா், ஓப்பந்ததாரா் பாலு, மின்வாாிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகா், உள்பட பணியாளா்கள் உடனிருந்தனா்.