செங்குன்றம் செய்தியாளர்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அகர்வால் உத்திரவின்படி, வடமண்டலம் இணை இயக்குனர் மற்றும் மாவட்ட அலுவலரின் வழிகாட்டுதலின்படி,நிலை அலுவலர் போக்குவரத்து P. தேவராஜன், அ.வேல்முருகன் ( பயிற்சி ) ஆகியோரது தலைமையில், செங்குன்றத்தில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தில் வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற இலவச சிறப்பு வகுப்பினை, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த,
திடீர் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பான்களை எப்படி உபயோகப்படுத்துவது என்ற செயல்முறை விளக்கத்தையும் வீட்டில் சமையல் செய்யும் போது சிலிண்டரில் திடீரென தீ பிடித்தால் அதை தடுத்து நம்மை எப்படி காப்பாற்ற முடியும் எனவும் பட்டாசு விபத்து, மின்சாரம் பாய்ந்து அவரை எப்படி மீட்பது என்ற வகுப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக வகுப்பு நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்களும் வியாபாரிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.