ஜூன் 11 முதல் 14 வரை “பிளாட் 50% மெகா விற்பனை”
கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் தனது மூன்று ஆண்டுகால வெற்றிகரமான வணிகப் பயணத்தை நிறைவு செய்துள்ளது இந்நிலையில் நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு,பல்வேறு சிறப்பு சலுகை விற்பனைகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது..
செய்தியாளர்கள் சந்திப்பில் லுலு ஹைப்பர் மார்க்கெட்டின் மண்டல மேலாளர் மகேசன், பொது மேலாளர் பாலாஜி, கொள்முதல் மேலாளர் சுனில் மேனன் மற்றும் சூப்பர் மார்க்கெட் மேலாளர் சின்னதுரை ஆகியோர் கலந்து கொண்டு விற்பனை சலுகைகள் மற்றும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சிறப்பு விற்பனை திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்தது ஜூன் 11 முதல் 14 வரை நடைபெறும் இந்த விற்பனை தினமும் காலை 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கூடுதல் நேர வசதியுடன் நடைபெறவுள்ளது.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு பிளாட் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாகவும், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மொபைல் போன்கள், வீட்டு உபயோக மின்சாதனங்கள், அத்தியாவசிய மளிகைப் பொருட்கள், உணவுப் பொருட்கள், சமையலறை உபகரணங்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.