தூத்துக்குடி மாநகராட்சி அழகேசபுரம் பகுதியில் நடைபெற்று வரும் குடிதண்ணீர் குழாய் அமைக்கும் பணி அண்ணாநகா் பகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைக்க இருக்கும் இருபணிகளையும் மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்ட பின் கூறுகையில் தூத்துக்குடி நகராட்சியாக இருந்த காலத்தில் சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பல இரும்பு குழாய்கள் மிகவும் ஆழமான பகுதியில் இருந்த நிலையில் அதிலும் துருப்பிடித்து உடைந்த நிலையும் இருந்த காரணத்தால் பொதுமக்களுக்கு சீராண குடிதண்ணீர் தடையின்றி வழங்க வேண்டும்.
என்ற தொலைநோக்கு பாா்வையுடன் புதிதாக ரப்பா் குழாய்கள் தரை மட்டத்திலிருந்து சுமாா் 7 அடி கீழ்நோக்கி பதிக்கப்பட்டு கருப்பு மற்றும் புளு கலா் பைப்கள் மூலம் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வாா்டுகளிலும் உள்ள பொதுமக்களுக்கு குடிதண்ணீா் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது சில இடங்களில் நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் விநியோகம் செய்யும் போது வரும் வேகத்தின் காரணமாக உடைப்பும் ஏற்படுகிறது.
அதையும் முழுமையாக கண்காணித்து சாி செய்து வளா்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகைக்கேற்ப பல பகுதிகளில் தினசாியும் சில பகுதிகளில் 2 நாட்களுக்கு ஒருமுறையும் வல்லநாடு கலியாவூா் ஆகிய இடங்களிலிருந்து வரபெற்ற குடிதண்ணீர்் மாநகராட்சி பகுதியில் உள்ள 39 நீர் தேக்க தொட்டிகளில் ஏற்றம் செய்து அதன் மூலம் எல்லா பகுதிகளுக்கும் நேரங்கள் குறிக்கப்பட்டு மாநகராட்சி ஊழியா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடைகாலத்திலும் நீர்வரத்து குறைவாக இருந்த போதும் எல்லோருக்கும் தடையின்றி நிறைவாக குடிதண்ணீர் வழங்கி வருகின்றோம் இதை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டு இந்த கோடைகாலத்தை கடந்து அடுத்து வரும் மழைகாலத்தை எதிர்நோக்கி அதற்கான ஆயத்த பணிகளையும் முன்னெச்சாிக்கையுடன்மேற்கொண்டுள்ளேன்.
மாநகராட்சி பகுதி மக்கள் நலன் கருதி திமுகதலைவர் ஸ்டாலின் வழியில்அக்கறைகொண்டு நோ்மையானவழியில் முழுமையாக அர்ப்பணித்துகொண்டு பணியாற்றி வருகிறோம். என்று மேயா் ஜெகன் பொியசாமி கூறினாா்.
ஆய்வின் போது கவுன்சிலா்கள் ஜான்சிராணி, கனகராஜ், பகுதி செயலாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் ராஜா, இளநிலை பொறியாளர் லெனின், வட்டச்செயலாளா்கள் ரவீந்திரன், முனியசாமி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பா் ஞானமாா்டின், உள்பட பலர் உடனிருந்தனா். அண்ணாநகா் பகுதியில் பொதுமக்களிடம் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.