ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்


பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக பொம்மிடி ரயில் நிலையத்தின் முன்பாக ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சங்கத்தின் தலைவர் ஆசாம்கான் அவர்கள் தலைமை தாங்கினார் சங்கத்தின் துணைத் தலைவர் சங்கீதாஸ்ரீ அவர்கள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்

காலை மாலை என இரண்டு வேளையும் 56108, 56812 ஆகிய ஈரோடு ஜோலார்பேட்டை பயணிகள் ரயிலை காலதாமதமாக இயக்குவதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது, மேலும் இந்த பேசஞ்சர் ரயில்களை லோக்கூரில் மணி கணக்கில் நிறுத்துவதற்கு பதில் பொம்மிடியில் லூப் லைனில் நான்காவது நடை மேடை அமைத்து காலதாமதத்தை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது

மேலும் காலை இயக்கப்படும் ஈரோடு ஜோலார்பேட்டை பாசஞ்சரை மேட்டூர் ரயில் புறப்படும் நேரமான காலை 5 மணிக்கு புறப்படும்படி மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் பொம்மிடி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களுக்கு பொம்மிடியில் நிறுத்தம் தராமல் புறக்கணிப்பதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது

கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிறைவேற்றாத பட்சத்தில் மக்களை ஒன்று திரட்டி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும் அறிக்கை வெளியிடப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் அவர்கள் கலந்துகொண்டு பயணிகள் சங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் ரயில்வே கோட்ட முற்றுகைப் போராட்டத்திற்கு முழு ஆதரவு தருவதாகவும் அறிவித்து கண்டன உரையாற்றினார்

சங்கச் செயலாளர் ஜெபசிங் பிரச்சினைகளை விளக்கிக்கூறி கண்டன உரையாற்றினார்

சங்க நிர்வாகிகள் பொருளாளர் முனிரத்தினம், துணைச் செயலாளர் இளங்கோவன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கௌரவ உறுப்பினர்கள் நியூ டைம்ஸ் ரஃபீக், அருணாச்சலம்,அய்யூப் கான், ரவிக்குமார் மற்றும் முருகன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்

ரிடோ தொண்டு நிறுவன நிறுவனர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *